Categories
தேசிய செய்திகள்

நின்றிருந்த டெம்போவில் பாலியல் வன்கொடுமை… “மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்”… அதிர்ச்சி மரணம்…!!!

மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை கற்பழித்து உள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் அரங்கேறியுள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறை படிந்திருந்தது. பெண் சித்திரவதை செய்யப்படுவதை பார்த்து யாரோ ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மோகன் சவுகான் ஆகும். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |