Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

கர்நாடக ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்திலிருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் நித்யானந்தாசாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அந்த சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை உத்தரவிடபட்டது. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து  நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த 18 தேதி  கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி, நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். பாலியல் வழக்குகள் உட்பட பல வழக்குகளில் நித்தியானந்தாவின் மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்வதற்கு இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்தியானந்தா தன் ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோபதிவு வாயிலாக தரிசனம் அளித்து வருகிறார்.

Categories

Tech |