நான் இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
கைலாசா என்று தனக்கென ஒரு நாடு உருவாக்கிக்கொண்டு நித்யானந்தா அவ்வபோது சில வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் இறந்துவிட்டார் என தகவல் வெளியானது. இது குறித்து நித்யானந்தா தரப்பில் இருந்தும் எந்த வீடியோவும் வெளியிடப்படாமல் இருந்தது .இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தா “நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு உடல்நிலை சரியில்லை, என்னால் சரியாக பேச முடியவில்லை சரியான தூக்கம் இன்னும் இல்லை. என்னை சுற்றி இருபத்தி ஏழு மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் என்னை கண்காணித்து தொடர்ந்து மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். என்னுடைய ஹேட்டர்கள் தான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் . இப்போது என்னால் பேச முடியவில்லை எனக்கு இன்னும் சக்தி வரவில்லை. நான் தற்போது சமாதி மனநிலையில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. எனக்கு சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். மேலும் எனது அறிவிப்புக்காக காத்திருக்கவும்” என்று தெரிவித்திருந்தார். இந்த கடிதமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.