அறிமுகம் இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இவற்றில் அபர்ணா பாலமுரளி, ரித்துவர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து உள்ளார்.
இத்திரைப்படம் மலையாளத்தில் “ஆகாசம்” எனும் தலைப்பில் உருவாகி இருக்கிறது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை சூர்யா தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இப்போது வைரலாகி வருகிறது.