அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்” ஆகும். வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் நாயகிகளாக நடித்து இருக்கின்றனர்.
Very happy to be launching the teaser of #NithamOruVaanam , my heart felt best wishes and congratulations to the entire team … https://t.co/khUeXMooW7@Rakarthik_dir @AshokSelvan @riturv @Aparnabala2 @ShivathmikaR @AndhareAjit @PentelaSagar @Viacom18Studios @riseeastcre
— atlee (@Atlee_dir) September 23, 2022
இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது டீசரை இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டீசர் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.