தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.
குறிப்பாக சில குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தையும் கொரோனா நிதியாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக தங்களுடைய சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைப்பதாக உள்ளது. இவ்வாறு நிதி வழங்கும் இந்த குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.