முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள நிலையில் இன்று மாலை அபுதாபி செல்கின்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சென்ற 24-ஆம் தேதி துபாய் சென்றார். இந்நிலையில் துபாயில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்ல இருக்கின்றார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்” அமைப்பதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சங்கமும் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அபுதாபியில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
இவ்விழாவானது இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்புரையாற்றுகிறார். மேலும் நிகழ்ச்சியில் தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.