நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு பின் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் போன்ற நகரங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருக்கிறது. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்த முடிவினை எடுத்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.