சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். மேலும் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர். இதையடுத்து நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். பின்னர் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை சஞ்சீப் பானர்ஜி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.