நிச்சயிக்கப்பட்ட பெண் குறித்து வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளைக்கு அனுப்பப்பட்ட கடிதம் – புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் உள்ள கேசவன்புரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது இளம்பெண் தக்கலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் எம்.எஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் எபனேசர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் தருமாறு கேட்கப்பட்டது. பெண் வீட்டாரும் அனைத்தையும் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக கையில் இருந்த குறைந்த அளவு பணத்தை கொடுத்து உள்ளனர்.
இதையடுத்து எபினேசர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதால் இன்னும் வசதி படைத்த பெண்ணை திருமணம் செய்து வைக்க எபனேசரின் தந்தை இஸ்ரவேல் மற்றும் தாயார் பிளாரன்ஸ் முடிவு செய்தனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை எப்படி நிறுத்தலாம் ? என்று திட்டம் போட்ட அவர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறு ஒரு நபருடன் இருப்பது போல மார்பிங் செய்து பெண் வீட்டாருக்கு அனுப்பியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பெண்ணின் உறவினர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மணமகன் எபனேசர், தந்தை இஸ்ரவேல் தாயார் பிளாரன்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.