பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களில் புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் 24 வயதுடைய Joao Guilherme Torres Fadini என்ற கோடீஸ்வர தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரின் 25 வயதுடைய Larissa Campos என்ற மகளுக்கு Joao என்ற நபருடன் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பின்னர் தங்கள் நண்பர்களுடன் அந்த இளம் தம்பதியினர் Sao Paulo மாகாணத்தில் இருக்கின்ற Itupararange என்ற அணைக்கட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தனது நண்பர்களுடன் நீச்சல் போட்டியில் ஈடுபடுவதற்கு joao சென்ற போது திடீரென தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நீரில் இறங்கும் வீரர்களுடன் சேர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுபற்றி Larissa கூறும்போது, ” எனக்கு மகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்துவிட்டு அவர் தண்ணீருக்குள் இறங்கி சென்றார். அதன்பிறகு அவரை நான் சடலமாகவே பார்த்தேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதிக அளவு நேசித்தோம். நாங்கள் தற்போது வரை இருந்த அன்பான நிமிடங்கள் அனைத்தும் என் மனதில் என்றும் நீங்காமல் இருந்து கொண்டிருக்கும். திருமணத்திற்குப் பிறகு அடுத்த வருடம் கொலம்பியாவில் தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது” என்று அவர் கூறியுள்ளார்.