Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிச்சயதார்த்தம் முடிந்து…. ஹோட்டல் விருந்து…. தொண்டையில் சிக்கிய பொருள்…. அதிர்ச்சியில் மணமக்கள் வீட்டார்….!!

நிச்சயதார்த்தம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் ட்யூப் லைட் துகள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிப்பவர் வாசு. இவர் மகளின் நிச்சயதார்த்தம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் வைத்து நேற்று நடந்து முடிந்தது. அதன் பிறகு அதே ஹோட்டலில் 100 பேருக்கு சாம்பார் சாதம் ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தனர்.

ஹோட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற உணவை சாப்பிட்ட விருந்தினர்கள் சாப்பிட்டபிறகு தங்கள் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கி வலி ஏற்படுத்துவதாக உணர்ந்தனர். இதனால் நன்றாக சாப்பாட்டை பிசைந்து பார்த்தபோது, அதில் ட்யூப் லைட்டின் பல்புகள் இருந்துள்ளது. இதனால் அனைவரும் எழுந்து நிர்வாகத்திடம் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமான பதிலை கொடுத்தது.

இதனால் ஆத்திரமடைந்த மணமக்கள் வீட்டார் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் அங்கு வந்த வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் நடந்தவற்றை விசாரித்து அனைவரையும் சமாதானப்படுத்தி ஹோட்டல் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டார். பின்னர் சாப்பிட்டவர்களிடம் ஸ்கேன் செய்து பார்த்து விட்டு ஏதேனும் பிரச்சனை இருந்தால் தன்னிடம் முறையிடும் படி கூறினார். அதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தை கண்டித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து மணமக்கள் வீட்டார் கூறுகையில், “160 ரூபாய் சாப்பாடு என்றபோதிலும் 100 பேருக்கு ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தோம். ஆனால் அவர்களின் கவனக்குறைவால் டியூப் லைட்டு துகள்கள் சாப்பாட்டில் இருந்துள்ளது.  இதுகுறித்து கேட்டபோது உணவு பரிமாறியவர்கள் நக்கலான பதிலை கொடுக்கின்றனர். சாப்பாடு சாப்பிட சிலர் வயிறு வலிப்பதாக கூறுகின்றனர். சின்ன குழந்தைகள் உட்பட அந்த சாப்பாடு சாப்பிட்டுள்ளனர்.

இது போன்று பல்லியோ அல்லது வேறு ஏதேனும் விழுந்தாலும் இப்படிதான் பேசுவார்கள் என நினைக்க தோன்றுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் கூறுகையில் வேண்டுமென்றே இது போன்று யாராவது செய்வார்களா? தவறுதலாக விழுந்திருக்கும். அதனை சாப்பிட்டவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நிர்வாகமே மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ளும் என கூறினார்.

Categories

Tech |