Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுத நடிகை கீர்த்தி ஷெட்டி”…. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்ஸ் விமர்சனம்…!!!!

நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதறிக் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நாற்பத்தி ஒன்று திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி தற்போது பல மொழி திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றார்.

இந்தநிலையில் கீர்த்தி ஷெட்டி கதறி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கீர்த்தி செட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இவரை பிராக் சரித்திரன் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தப்போது திடீரென சரித்திரன் தனது துணை தொகுப்பாளர் உடன் சண்டை போட்டுள்ளார். பின் சண்டை அதிகரித்து பளார் என கன்னத்தில் அறைந்து பிராங்க் செய்துள்ளார்.

இதைப்பார்த்த கீர்த்தி செட்டி அதிர்ச்சியாகி அழுதுள்ளார். இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீர்கள். எனக்கு கோபமாக பேசினால் கூட பிடிக்காது என அழுது கொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் யாராவது ஃபிராங்க் பண்ணுவாங்களா. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா நடந்துப்பீங்க என தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |