நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவிற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றும் வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைத்தன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாகசைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டி பிடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அது தன் திருமண நாள் எனவும் அதனை அழிக்கும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Categories
நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா… “சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீங்க”….?
