அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. யாரெல்லாம் கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களோ? அவர்கள் எல்லாம் மீண்டும் இணைப்போம் என்று கூறியிருந்தோம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கட்சியின் கோட்பாடுகளுக்கு யாரெல்லாம் இசைந்து கொடுக்க விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் நீதிமன்ற உத்தரவை நாம் மதித்து நடப்போம். எனக்கு தொண்டர்கள் அளித்து இருக்கக்கூடிய பொறுப்பு ஒருங்கிணைப்பாளர். அதன்படி அனைவரையும் ஒருங்கிணைத்து அனைத்து செல்வேன். இனிமேல் அவங்க தரப்பு, இவங்க தரப்பு என்றெல்லாம் எதுவும் கிடையாது. அதிமுக ஒரே இயக்கம் தேவைப்பட்டால் கலந்து பேசி பொதுக்குழு நடத்தப்படுவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.