தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம், ஜெயின்லிபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணய்யா- கலாம்மா தம்பதி. இவர்களது மகள் சரஸ்வதி. கடந்த மே மாதம் 8ஆம் தேதி மகள் சரஸ்வதிக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி சரஸ்வதி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு சிறிது நாட்கள் கழித்து சரஸ்வதி தனது கணவன் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மகளுக்கும் தந்தைக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருநாள் கிருஷ்ணய்யா மகள் சரஸ்வதியையும் மனைவிகள் கலாம்மாவையும் கொடூரமாக கொலைசெய்து விட்டு தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் இவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாயும் மகளும் இறந்துவிட, கிருஷ்ணய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.