தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வன்முறை, கலவரத்தை தூண்டிவிட எதிர்க்கட்சிகள் முன்னேற்பாடுகள் செய்வதாகவும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் 100க்கும் மேற்பட்டோர் சென்று பிரச்சனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.