Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 21-ஆம் தேதி வரை…. திண்டுக்கல்லில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை முதல் 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் ஒருவாரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |