Categories
மாநில செய்திகள்

நாளை முதல் வீடு வீடாக….! உங்க தேவைகளை சொல்லுங்க…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!

நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்பு முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

அவர்களுக்கு தொழில், கடன் உதவி, உபகரணங்கள் வேலை உள்ளிட்ட எந்த தேவையாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதை உடனடியாக பூர்த்தி செய்யும்.  மேலும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் டாஸ்மாக் கடைகளில் இதுவரை 154 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் மின்சாரத்துறை திருத்த மசோதாவை திரும்ப பெற, முதல்- அமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |