நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஹரியானாவில் நாளை முதல் மே 31-ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கோடைகாலம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மே இறுதிவரை பள்ளிகள் இயங்காது என்று கூறப்படுகிறது.