நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடை மற்றும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காளை மாடு, எருமைக் கிடா ஒன்றுக்கு நுழைவு கட்டணம் ரூ.40- லிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், லாரி ஒன்றுக்கு ஒரு முறை வருவதற்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோழி ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.25 ஆகவும், கருவாடு கூடை கட்டு ரூ.50, தரகு கட்டணம் ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.