Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஓஎம்ஆர் சாலை… சுங்கச்சாவடியில் கட்டண வசூல் இல்லை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறு சிறு கிராமம் வரை 20 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎம்ஆர் சாலையிலுள்ள பெருங்குடி, நாவலூர், துறைபகம், மேடவாக்கம், அக்கறை ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் 13 ஆண்டுகளாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |