Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன்பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான இறுதி ஆண்டு வகுப்புகள் நாளை முதல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |