புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் நாளை முதல் 11ம் தேதி வரை முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 31ம் தேதி வரை பல மாநிலங்களில் 6 கட்ட நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த பட்சத்தில், ஆகஸ்ட் 1முதல் கொரோனாவின் நிலையை பொருத்து ஊரடங்கு குறித்து முடிவு எடுத்துக் கொள்ளுமாறு அந்தந்த மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த வரிசையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் நாளை முதல் 11ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை 6-8 மணி வரையும் மாலை 6 – 8 மணி வரையும், மருந்துக்கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.