Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் பார்கள் நான்கு நாட்கள் மூடப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

ஆகவே இந்த நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்கவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. எனினும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |