நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா அதி வேகமாக பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்களில் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.