புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதால், உள்ளூர் விடுமுறையாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.