Categories
மாநில செய்திகள்

நாளை தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….. மின்விளக்குகளால் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்….!!!!

தமிழகத்தில் நாளை தமிழக நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1ஆம் தேதியை எல்லை போராட்டத்தின் நினைவு கூறும் நாளாக பார்த்தனர்.

அதை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதை எடுத்து 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்பட்ட தினமே தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நாளை தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |