தமிழகத்தில் கூட்டத்தொடர் நாளை முதல் 2 நாள் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்பிக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஓ பண்ணி செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. அதில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தொடரில் நாளை ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் செய்கிறார். அதனையடுத்து மறுநாள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.