வங்க கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அவை மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.