மீன் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
புலாவ் அரிசி – அரை கிலோ
துண்டு மீன் – 1/4 கிலோ
வெங்காயம் – 5
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சோம்பு – 1 1/2 ஸ்பூன்,
சீரகம் – 1 1/2 ஸ்பூன்
எலுமிச்சை – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 1/2 சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து, கொள்ளவும். பின் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அதற்கு முன்பாக அரிசியை ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீன், மல்லித்தூள், சோம்பு, சீரகத்தூள், எலுமிச்சம் சாறு சேர்த்து நன்கு கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். அதனை தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.