021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கடு நாளையுடன் முடிவடைகிறது.
எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு அதிகம் இருந்தால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.