சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர்.
அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அதுதான் வருடந்தோறும் மருதுபாண்டியர் குரு பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றையதினம் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த வருவார்கள். அத்துடன் ஒவ்வொரு வருடமும் அக். 24ம் தேதி அரசு சார்பாக நினைவு தினமும், 27ம் தேதி காளையார்கோயிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறும்.
இந்த நிலையில் நாளை (27ஆம் தேதி) மருதுசகோதரர்களின் 221வது நினைவுதினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி திருப்பத்தூர், காரைக்குடி, சிங்கம் புணரி தவிர 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோயில், திருப்புவனம் போன்ற தாலுகாவிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.