ஜெய்பூரில் ஜாட் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் செய்து விடுகிறார்கள். ஆனால் பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்காக ஒரு வார்த்தை கூட இரங்கல் செய்தி தரவில்லை.
விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் சில அதிகாரிகள் இருந்தாலும், சிலர் அகங்காரம் பிடித்து அலைகின்றனர். நான் இப்படி பேசுவதால் என்னுடைய பதவி பறி போகும் என்பது குறித்தும், ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படுவேன் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. எப்போது என்னை பதவி விலகச் கூறினாலும், நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கைகளோடு வரமாட்டார்கள். வெற்றியுடன் தான் திரும்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.