நாய்களுக்கு கண்ட இடத்தில் உணவளித்தால் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. இதனால் நாய்கடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாய்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கண்ட இடத்தில் உணவளிக்க கூடாது எனவும், விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதை தவிர்த்து மற்ற இடங்களில் உணவளித்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் விலங்குகளை துன்புறுத்துதல், அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் நாய்களின் தொந்தரவிலிருந்து மாணவர்களும், மாணவர்களின் தொந்தரவிலிருந்து நாய்கள் பாதுகாக்கப்படுவார்கள். இது விலங்குகளின் மீது உணர்வுபூர்வமாக மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.