பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாய்களுடன் உரிமையாளர்கள் நடமாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள மாவட்டம் ஒன்றில் அம்மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாய்களுடன் தெருவில் நடமாட தடை விதித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கையை மூன்று தடவை மீறும் உரிமையாளர்களின் நாய்கள் கொல்லப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த பட்டுள்ளதையடுத்து, இது இரக்கமற்ற செயல் என்று மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது குறித்த உத்தரவு இன்னும் அமலுக்கு வரவில்லை, பரிசினை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த உத்தரவு கொண்டுவரப் பட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் வெய்சின் மாவட்ட நிர்வாகத்தால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில், “மாவட்டத்தில் எங்காவது ஒரு பகுதியில் நாயுடன் அந்த உரிமையாளர் நடமாடுவது அதிகாரிகளுக்கு தெரியவந்தால் முதல் தடவை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது தடவையும் நாயுடன் வந்தால் சுமார் 23 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதே நபர் மூன்றாவது நபர் வந்தால் காவல்துறை அந்த நாயை கொன்று விடுவார்கள் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 20ஆம் தேதிக்கு முன்னர் நாய் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.