சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.
சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் காளியப்பன் கைது செய்தனர்.