Categories
உலக செய்திகள்

நாயாக மாறிய வாலிபர்…. ரூ.12 லட்சம் செலவழித்து விசித்திரம்…. வைரல்….!!!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை இருந்துள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவழித்து அவர் நாய் போல மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற இளைஞர், அண்மையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அழகான நாய் ஒன்று நடப்பது, குறைப்பது என பல சேட்டைகளை செய்கின்றது. இறுதியில் அந்த நாய் பேசத் தொடங்குகிறது. அதன்பிறகுதான் அந்த இளைஞர் நாய் வேடத்தில் இருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருக்கு நீண்ட காலமாக ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.

இதையடுத்து சினிமா நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் அழகான ஒரு நாய் போல அவருக்கு வேஷமிட்டு உள்ளனர். அதனை தயாரிப்பதற்கு 40 நாட்கள் ஆனது. மொத்தம் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளார். அவருக்குப் பிடித்த கூலி வகை நாய் போல வேடமிட்ட தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் தரும் உண்மையான படத்தை அவர் வெளியிடவில்லை.

Categories

Tech |