Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம கவசம் அல்ல கிரீடம்…! ”இப்போல்லாம் சிறுத்தைனு சொல்லுறாங்க”…. கெத்து காட்டி பேசிய திருமா …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், முன்பெல்லாம் சாதி அறிவதற்கு சுற்றி வளைத்து கேட்பார்கள் நீ எந்த ஊர், எந்த மாவட்டம், யாருக்கு சொந்தக்காரர் என்று கேட்பார்கள். முதலில் மாவட்டத்தை கேட்பார்கள், அப்புறம் எந்த ஊர் என்று கேட்பார்கள், அப்புறம் யார் சொந்தக்காரன் என்று கேட்பார்கள் சாதியை கண்டுபிடிப்பதற்கு,

இப்போது உடனடியாக அறிந்து விடுகிறார்கள் எங்கள் பெயர் தமிழில் இருப்பதால், விடுதலை செழியன் தமிழில் இருப்பதால் இன்னார் என்று தெரிந்துவிடுகிறது. பாவலன் என்று தமிழ் பெயரா இன்னார் என்று தெரிந்து விடுகிறது. நல்ல தமிழில் பேசினால் தமிழாசிரியரா என்பார்கள் அன்று, இப்போது சிறுத்தையா என்கிறார்கள். நீ கவசம் என்று நினைத்தவர்கள்..

கவசம் என்றால் பாதுகாப்பு உடை, உடலில் போட்டல் உடல்கவசம், முகத்தில் போட்டால் முககவசம், பாதுகாப்புக்காக உடுத்தக்கூடியது, உன்னை வைத்துக்கொண்டால் பாதுகாப்பு என்று நினைத்திருந்தார்கள், கூட வைத்துகொண்டால் ஒரு பாதுகாப்பு, கொஞ்சம் ஓட்டு கிடைக்கும் சாதிப் பிரச்சினைகள் இருந்தாலும் சரி பண்ணிக்கலாம்,

சமரசம் பண்ணிடலாம் அப்படி என்று உன்னை கவசம் என்று நினைத்தவர்கள் இப்போதுதான் அறிகிறார்கள் நீ தான் கீரிடம் என்று. கிரீடமே நீதான் என்று இப்பதான் தெரிகிறது. எல்லா பக்கமும் எல்லையாய் கொண்ட கருப்பு மனிதன் நீ. நீ கருப்பு மனிதன் ஆனால் உன்னுடைய உள்ளம் என்பது வெள்ளையானது எந்த தெரிவித்தார்.

Categories

Tech |