Categories
உலக செய்திகள்

“நாம் சொர்க்கத்தில் சந்திக்கலாம்”…. போரில் கொல்லப்பட்ட அம்மாவுக்கு… மகளின் உருக்கமான கடிதம்….!!!!!

உக்ரைன் போரில் கொலை செய்யப்பட்ட தாயாருக்கு அவரின் 9 வயது மகள் உருக்கமான கடிதத்தை எழுதி இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பல பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் காரில் 9 வயது மகளுடன் சென்றபோது இளம் தாயார் ஒருவர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆனால் அவர் உக்ரைனில் எந்தயிடத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் உக்ரைன்போரில் கொலை செய்யப்பட்ட தன் தாய்க்கு 9 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் நீங்கள் சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா, உங்களைக் பார்க்க சொர்க்கத்திற்கு வர என்னால் முடிந்தவரை நல்ல பெண்ணாக இருக்க முயற்சி செய்வேன். என் குழந்தைப் பருவத்தில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். நீங்கள்தான் உலகிலேயே மிகச்சிறந்த அம்மா. நான் உங்களை ஒரு போதும் மறக்க மாட்டேன். உங்களுக்கு என் முத்தங்கள் என எழுதி உள்ளார். இக்கடிதத்தை உக்ரைனிய எம்.பி லிசியா ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

Categories

Tech |