வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
நாம் வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டி விடுகிறோம். இந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கான 15 வழிமுறைகளை பார்க்கலாம்.
- நாம் காரை தண்ணீரால் சுத்தம் செய்யும் போது காரை புல்வெளியின் மீது நிறுத்தி வைத்துவிட்டு சுத்தம் செய்தால் அந்த தண்ணீரானது வீணாகாமல் புற்களுக்கு பாயும்.
- பாத்திரம் கழுவும் போது ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவினால் அந்தத் தண்ணீரானது வீணாகாமல் பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும். இதனையடுத்து பாத்திரம் கழுவி முடிந்த பிறகு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வீணாக கீழே கொட்டாமல் அதை செடிகளுக்கு ஊற்றலாம்.
- அதன்பிறகு துணி துவைப்பதற்காக நாம் பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். இந்த தண்ணீரில் கிரீஸ் மற்றும் சோப்பு இருக்கும் பட்சத்தில் அதில் சில துளிகள் எலுமிச்சை பழச்சாறை ஊற்றினால் கிரீஸ் மற்றும் சோப் இல்லாத தண்ணீராக மாற்றி விடலாம். இதற்கு பதிலாக பேபி ஷாம்புவை கூட பயன்படுத்தலாம்.
- மழை பெய்யும் போது மழை நீரை ஒரு பேரலில் சேமித்து அந்த நீரை கொதிக்க வைத்து நாம் குடிநீராக பயன்படுத்தலாம். அதாவது மழைநீர் ஒரு தூய்மையான மற்றும் சுத்தமான நீர் என்பதால் குடிப்பதற்கு பயன்படுத்துவதால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
- அதிக மழை பெய்யும் இடங்களில் அறுவடை தொட்டிகளை நிறுவினால் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
- மழை பெய்யும் போது வீட்டின் மேற்கூரையில் இருந்து விழும் தண்ணீரை நாம் ஒரு பாத்திரம் அல்லது பேரல்களில் சேமித்து வைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவதற்கும், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், சமைத்தல், காய்கறிகளை கழுவுதல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஷவர் மூலமாக குளிப்பதால் நிறைய தண்ணீர் வீணாகிறது. எனவே ஷவருக்கு பதிலாக வாளியை பயன்படுத்தி குளித்தால் தண்ணீர் வீணாவதை நம்மால் தடுக்க முடியும்.
- நாம் தண்ணீர் பாட்டில் வாங்கி தண்ணீர் குடிக்கும்போது மீதம் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து பாட்டிலை தூக்கி கீழே போட்டு விடுவோம். அந்தத் தண்ணீர் பாட்டிலை கீழே போடாமல் அதற்கு பதிலாக தண்ணீர் பாட்டிலில் சில துளைகளை போட்டு நாம் செடிகளுக்கு ஊற்றுவதற்கு பயன்படுத்தலாம்.
- ஷவரை பயன்படுத்தி சிலர் கார்களை கழுவுவதால் நிறைய தண்ணீர் வீணாகிறது. எனவே ஷவரை பயன்படுத்தி காரை கழுவுவதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை வைத்து கழுவினால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
- ஒருவர் காரை கழுவும் அதற்கு முன்பாக டிரைவ்வேயை சுத்தம் செய்தால் தண்ணீர் மிச்சமாகும்.
- சமையலறையில் காய்கறிகளை கழுவுவதற்கும், கைகளை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
- பாஸ்தா மற்றும் காய்கறிகளை வேக வைப்பதற்கு பயன்படுத்திய தண்ணீரை சூப் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
- கிரே வாட்டர் மறுசுழற்சி அமைப்பை நிறுவுவதன் மூலமாக கழிவுநீர் தொட்டியில் வீணாக கலக்கப்படும் நீரில் 35% தண்ணீரை நாம் சேகரிக்கலாம்.
- நம்முடைய வீட்டின் வளாகத்திற்குள் ஒரு மழை தோட்டத்தை உருவாக்குவதன் மூலம் தண்ணீர் வீணாக தேங்கி கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவதை தடுத்து அந்த தண்ணீரை செடிகள் மற்றும் புற்களுக்கு பயன்படுத்தலாம்.
- துணி துவைப்பதற்கு பயன்படுத்திய நீரை நாம் வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
- பூந்தொட்டிகளில் நாம் தண்ணீர் ஊற்றும் போது தண்ணீரானது கீழே சிந்தி வீணாகும். எனவே பூந்தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் போது அதற்கு அடியில் ஒரு பாத்திரம் அல்லது வாளியை வைத்து ஊற்றினால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்.
- நாம் சமையலறைகளில் பயன்படுத்தும் தண்ணீரை வீட்டின் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
நாம் தண்ணீரை வீணாக்காமல் அதை சேமிப்பதன் மூலமாக நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது. நம்மில் பலர் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகின்றனர். அப்படி காசு கொடுத்து வாங்கிய தண்ணீரை நாம் வீணாக்குவதால் நம்முடைய பணம் வீணாகிறது. இந்த தண்ணீரை நாம் மிச்சப்படுத்துவதன் மூலமாக நமக்கு பணமும் மிச்சமாகிறது. குறைந்த நீராதாரங்களை பயன்படுத்துவதன் மூலமாக வறட்சியின் போது தோட்டத்தில் வளர்க்கும் செடிகள் மற்றும் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். நாம் பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலமாக கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குவதை நம்மால் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் சில தீமைகளும் இருக்கிறது. நாம் காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டுமென்றால் நாம் ஒருமுறை காய்கறிகளை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக வேறு தண்ணீரை பயன்படுத்துவதால் நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும். நாம் பொதுவாக துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். ஆனால் பெரும்பாலான சோப்புகளில் சோடியம் மற்றும் குளோரைடு கலவைகள் இருப்பதால் அது தாவரங்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். கிரே வாட்டரில் கணிசமான எண்ணிக்கையிலான நோய்க்கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை செய்யாமல் ஒரு நாளைக்கு மேல் சேமித்து வைத்தால் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கிரே வாட்டரை நாம் குளிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. இதனால் சருமத்திற்கு தீங்கு ஏற்படலாம். மேலும் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் போது அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து அதற்கு தக்கவாறு பயன்படுத்தினாலே மறுசுழற்சி மூலம் ஏற்படும் பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும்.