Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு”…. ஆராய்ச்சி நிலையம் தகவல்….!!!!

நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது.

நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 95 டிகிரியும் குறைந்தபட்சமாக 71 டிகிரி ஆகவும் இருக்கக்கூடும். மூன்று நாட்களுக்கு வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |