Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாவட்ட செயற்குழு கூட்டம்”…. செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு….!!!!!

நாமக்கலில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியபின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வரும் 9-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

மேலும் 30ஆம் தேதி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டும். பின் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா, அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |