திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணப் படுத்திய வடக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அதிமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, “அதிமுக மக்கள் சக்தி மிகுந்த கட்சி வாழையடி வாழையாக அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி திமுகவினருக்கு அதிமுக மீது பழி போடுவதும் புகார் அளிப்பதும் புதிதல்ல.
இவ்வாறு திமுகவினர் செய்யும் இந்த சின்னத்தனமான வேலைகளுக்கு அதிமுகவினர் ஒரு நாளும் பயப்பட மாட்டோம். நான் ஆறு முறை சிறை சென்று உள்ளேன் சிறை ஒன்றும் எனக்கு புதிதல்ல. 30 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் அதிமுகவை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்டுள்ள வழக்கை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் உண்மை என்றும் வெல்லும்.” இவ்வாறு அவர் கூறினார்.