Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் 360 ° வீரரா?…. ஒரே ஆளு அவரு தான்…. “சூர்யா சொன்ன பதில்”….. பார்த்து புகழ்ந்து பாராட்டிய ஏபிடி..!!

நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.. இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது என்றால் அதற்கு முக்கியமாக கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் முக்கிய காரணம் என்றுதான் சொல்லவேண்டும்..

அதில் குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் இந்த உலகக் கோப்பையிலும் அடித்து நொறுக்கு ரன்களை குவித்து வருகிறார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பலமே சூர்யா தான். அது மட்டுமல்ல மிகச் சிறந்த பினிஷர் ஆகவும் இருக்கிறார். எந்தவித இக்கட்டான நிலையிலும், பிரஷர் இல்லாமல் தனது அதிரடியை ஆடக்கூடிய சூரியகுமார் கடைசியாக நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்..

அந்த போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. அது மட்டும் அல்லாமல் அந்த போட்டியில் அவர் 61 ரன்கள் குவித்ததன் மூலம் நடப்பு 2022 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.. இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி வீரர் என்றும் புகழ்ந்து பாராட்டி வருகிறார். அதற்கேற்றாற்  போல் அவரும் மைதானத்தின் எல்லா திசையிலும் அடித்து இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இதற்கு உதாரணமாக நேற்று முன்தினம் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த போட்டியிலும் மிகச் சிறப்பாகவே ஆடினார். போட்டிக்கு பின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என சூர்யாவை பாராட்டி இருந்தார். இதையடுத்து இந்தியா பேட்டர் சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸைப் பற்றி குறிப்பிடுகையில், “உலகில் ஒரே ஒரு 360 ° வீரர் மட்டுமே இருக்கிறார், அவரைப் போல விளையாட முயற்சிப்பேன்” என்று அடக்கமாக பதிலளித்தார்.

from pioneer to successor: ab de villiers reacts to suryakumar yadav's 360° brand of stroke-

சூர்யாவின் இந்தப்பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து மகிழ்ந்து போன ஏபிடி வில்லியர்ஸ் அதற்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யகுமாரை டேக் செய்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ், நீங்கள் மிக விரைவாக அங்கு வருகிறீர்கள் நண்பரே, இன்னும் அதிகமாக! இன்று (6ஆம்தேதி) [ஜிம்பாப்வேக்கு எதிராக] நன்றாக விளையாடினீர்கள்.” என்றார்.. அதாவது, நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி.. டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளது சூர்யாவுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

நவம்பர் 10ஆம் தேதி 2ஆவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

 

Categories

Tech |