Categories
தேசிய செய்திகள்

“நான் வேலை வாங்கித் தருகிறேன்”… முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் மீது புகார்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று கூறி கடந்த அதிமுக ஆட்சியின் போது வி கே சசிகலாவின் கணவர் நடராஜன் எனது நண்பர் அவரிடம் கூறி இசை ஆசிரியர் வேலை வாங்கித் தருகிறேன் அதற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை நம்பிய செல்வி வங்கி கணக்கில் 5 லட்சம் கடன் வாங்கி ஜெயலானியின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சமும், 4 இலட்சம் நேரடியாகவும்  கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் ஜெயலானி வேலை வாங்கி கொடுக்காமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு வேலை வாங்கித் தரவில்லை என்றால் தன்னுடைய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு இருக்கின்றார். அதற்கு ஜெயலானி பணம் தர முடியாது என மறுத்தது மட்டுமல்லாமல் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் செல்வி திருப்பூர் மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் சசாங் சாயிடம் இந்த நிலையில் அந்த புகார் மனுவை தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டனை விசாரிக்கும்படி உத்தரவிட்டார் அதன்படி இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |