சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், என்னை விட்டு விலகி விடுங்கள் எனவும் அந்த சிறுமி நடராஜனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடராஜன் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அந்த சிறுமியின் புகைப்படத்தை நடராஜன் தவறான வார்த்தைகளுடன் சேர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.