புதுவையில் உள்ள ஒரு பேக்கரியில், ஆச்சரியத்துடன் பாரதியாரை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், புது முயற்சியை எடுத்துள்ளது. 482 கிலோ சாக்லேட்டுகளை கொண்டு 6 அடி உயரத்தில் பாரதியாரின் சாக்லேட் சிலை பலரையும் வியக்க வைக்கிறது. புதுவையில் உள்ள ஒரு தனியார் சாக்லேட் ஃபேக்டரியில் வருடந்தோறும் சாக்லேட்டால் செய்யப்படும் பொருட்களில் ஒரு புது திறமையை வெளிப்படுத்துவார்கள்.
அதன்படி, கடந்த காலங்களில் சாக்லேட்டால் ரஜினிகாந்த் உருவம், அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை வடிவமைத்திருந்தனர். இந் நிலையில் தற்போது பாரதியாரின் சாக்லேட் சிலையை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த சிலையை வடிவமைப்பதற்கு 106 மணிநேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் பாரதியாரின் வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” பாரதியின் கைகளில் இருப்பது போல் வடிவமைத்துள்ளனர்.
இதைப்பற்றி இந்த சாக்லேட் வடிவமைத்தவர்கள் கூறுகையில், இங்கு வரும் ஏராளமான மக்கள் பாரதியாரின் சாக்லேட் சிலையை பார்ப்பது மட்டுமல்லாமல் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, சிலையின் கலை அழகையும் ரசித்து வருகின்றனர். மேலும் பாரதியின் சாக்லேட் சிலையை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர்.