பாகிஸ்தானில் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலமாக இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி இருக்கிறார்.இந்தநிலையில் ஷபாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர்.
ஆனால் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் ஆரிப் ஆல்வி மறுத்துள்ளார். இந்த நிகழ்வில் இருந்து அவர் விலகிக்கொண்டதால், புதிய மந்திரிசபை பதவியேற்கும் நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அவர்கள் இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிபர் மறுத்து இருப்பதால் செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.மேலும் இதற்க்கு முன்னதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் செனட் தலைவரே பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.