Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ரொம்ப பயந்தேன்… இப்படி இருந்ததில்லை…. நெகிழ்ந்து போன சந்தானம்…!!

தமிழ் திரையுலக பிரபல நடிகர் சந்தானம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய ‘பிஸ்கோத்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தியேட்டர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறந்திருப்பதால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க தியேட்டருக்கே சென்றிருக்கிறார் சந்தானம்.

பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் திரைப்படத்தை முதலில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நினைத்திருந்ததாகவும் பின்னர் திரையரங்குகள் திறப்பதால் அவசரமாக வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பயத்தால் தியேட்டருக்கு மக்கள் வருவார்களா? என்று பயம் இருந்ததாகவும் இதுபோல் இதுவரை பயந்ததில்லை என்றும் கூறினார். ஆனால் மக்கள் தியேட்டருக்கு வந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு பெரிய நன்றி. எனது ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

Categories

Tech |